இந்தியா-இலங்கை தொடரை புறக்கணித்த விளம்பரதாரர்கள் - பிசிசிஐக்கு ஏற்பட்ட சிக்கல்
இந்தியாவில் இடம்பெறும் துடுப்பாட்ட போட்டிகளை ஒளிபரப்பு உரிமத்தை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தற்போது நடைபெற்றுவரும் இந்தியா-இலங்கை தொடருக்கான ஒளிபரப்பு உரிமைக் கட்டணமாக ஒரு போட்டிக்கு ரூ.60.01 கோடியை பிசிசிஐக்கு அந்நிறுவனம் செலுத்துகிறது.
இந்நிலையில் இந்த தொடரை விளம்பரதாரர்கள் முற்றிலும் புறக்கணித்துள்ளனர்.
ரூ.200 கோடி இழப்பு
நேற்று இடம்பெற்ற போட்டிக்கு நிகழ்நிலை ஒளிபரப்புதாரர் ஒருவர்கூட இல்லாத நிலையில் போட்டிக்கான உரிம தொகையில் 30-40% மட்டுமே விளம்பரம் மற்றும் தொடர்புடைய விற்பனை மற்றும் சந்தா மூலம் திரும்பப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தொடரில் குறித்த நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.200 கோடி இழப்பை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உடை வழங்குனரிடம் இருந்து எம்பிஎல் விலகிய நிலையில், கேகேசிஎல் க்கு உரிமையை வழங்கியுள்ளது. இதேபோல் பிசிசிஐயின் உள்நாட்டு போட்டிக்கான உரிமைகளை வைத்திருந்த பேடிஎம் விலகியநிலையில், அதை மாஸ்டர்கார்டுக்கு மாற்றி உள்ளது குறிப்பித்தக்கது.
மேலும் பைஜூஸ் நிறுவனமும் வரும் மார்ச் மாதத்துடன் ஒப்பந்தத்தில் இருந்துவிலக முடிவு செய்துள்ளது. இதனால் பிசிசிஐக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
