சுற்றுலா பயணிகளை வரவழைக்க அரசாங்கம் பகீரத பிரயத்தனம்
2021 ஜனவரியில் இருந்து இதுவரை 152,109 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 20 நாட்களில் மட்டும் 47,120 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கூட்டு ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்காக டிராவல் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை இணைந்து ஊக்குவிப்புத் திட்டத்தைத் தொடங்குகின்றன.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பேரில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நேற்றுமுன்தினம் (21) சுற்றுலாத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.