போதைப்பொருள் பாவனைக்காக விபசாரம் : கைதான பெண்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்
போதைப்பொருள் பாவனைக்காக விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 25 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது .
பேலியகொடை காவல்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 25 பெண்களும்
இவ்வாறு , கைது செய்யப்பட்ட 25 பெண்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதுடன் இவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது .
இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது இவர்கள் கொனோரியா, ஹெர்பெஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது .
காவல்துறையினர் விடுத்துள்ள வேண்டுகோள்
சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அளித்து மறுவாழ்வு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், இந்த பெண்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வைத்திய பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு பேலியகொடை காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |