வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் - சுற்றிவளைத்த ஊழல் தடுப்பு பிரிவினர்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
By Pakirathan
வெளிநாடுகளிலிருந்து பெண்களை விசா மூலம் அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்த சொகுசு விபச்சார நிலையம் ஒன்றை பாணந்துறையில் ஊழல் தடுப்பு அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த சொகுசு விபச்சார நிலையமானது கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரால் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
குறித்த சுற்றிவளைப்பில், இந்தோனேஷியப் பெண் உட்பட இரண்டு பெண்களும் அதன் முகாமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு

அதேசமயம், குறித்த நிலையத்தில் இருந்து, குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள், பத்தாயிரம் ரூபா பணம் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டுப் பெண்களை பணத்துக்காக விற்பனை செய்வதாக ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி