கோட்டாபயவை சிங்கள மக்கள் தூசிப்பார்கள் - அன்றே கணித்த ஆயர்
கோட்டாபயவை சிங்கள மக்கள் துாசிப்பார்கள் என மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை கடந்த காலத்தில் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மன்னார் முள்ளிக்குளம் பிரச்சினை தொடர்பில், முன்னர் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச இருந்த வேளை, முன்னாள் ஆயரும் தாமும் அவரை சந்திக்கச் சென்றதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
தமது சந்திப்புக்காக பிற்பகல் 3 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும் இரவு 7 மணிக்கே சந்திப்புக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் கோட்டாபய ராஜபக்ச, ராயப்பு ஜோசப் ஆண்டகையை கருத்திற்கொள்ளாமல் நடந்து கொண்டார்.
இதன்போது “எனது மக்களின் பிரச்சினைகளை பேச வந்தபோது நீங்கள் அதனை கருத்திற்கொள்ளவில்லை. நான் உயிருடன் இருந்தாலும் இல்லையென்றாலும் நிச்சயமாக சிங்கள மக்கள் உங்களை தூசிப்பார்கள்" என்று அவர் அன்றே கூறினார். அது இன்று உண்மையாகியிருக்கிறது என்று செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
