PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்!
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்ற வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் இன்று (09) காலை 10.00 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன்போது “அரசு மக்களுக்காக மக்கள் அரசுக்காக அல்ல“, “இனியும் வேண்டாம் அரச பயங்கரவாதம்“, “நாங்கள் கேட்பது மாற்றம் ஆனால் கிடைத்தது ஏமாற்றம்“, “வேண்டாம் வேண்டாம் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்“ போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
