தமிழர் பகுதியில் வாள்வெட்டு குழுவிற்கு எதிராக வெடித்த போராட்டம்
மட்டக்களப்பு(Batticaloa) - ஆரையம்பதியில் வாள்வெட்டு குழுவை இல்லாம் செய்யுமாறும் காத்தான்குடி காவல்துறையினரின் செயற்பாட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (03.03.2025) ஆரையம்பதி பிரதேச செயலக்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20ஆம் திகதி இரவு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 6 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன் நுழைந்து தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நீதி கோரி போராட்டம்
இதில் தொடர்புடைய 4பேர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டதுடன் இதில் தொடர்புடைய இருவரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயற்பட்டுவருதாகவும் இதனால் பிரதேசத்தில் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வாள்வெட்டுக்குழுவை இல்லாமல் செய்யுமாறு கோரி இன்று(03) மண்முணை மேற்கு ஆரையம்பதி பிரதேச செயலக்துக்கு முன்னால் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
இதன்போது, வாள்வெட்டுக்குழுவை பிரதேசத்தில் இருந்து இல்லாமல் ஒழி, தாக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடு, வன்முறை சூத்திரதாரிகளை சிறையில் அடை, இளைஞர்களை கைகூலியாக்குவபர்களை கண்டுபிடி, போன்ற வாசகங்ள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மனு கையளிப்பு
இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கான மனு ஒன்றை பிரதேச செயலாளரிடம் போராட்டக்காரர்கள் கையளித்த பின்னர் அங்கிருந்து பேருந்தில் மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்குமாகாண பிரதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் காரியலத்துக்கு முன்னால் சென்று அவருக்கான மனுவை காவல்துறை அத்தியட்சகரிடம் கைளித்துள்ளனர்.
அதன்போது, சம்பவம் தொடர்பில்விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அத்தியட்சகர் உறுதியளித்ததுடன் அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
