கொழும்பில் பதற்றம்! பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை கண்ணீர்ப்புகை பிரயோகம் (நேரலை)
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட ஆர்ப்பாட்டத்திலிருந்து பின்வாங்க மாணவர்கள் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி செல்லும் வீதியை மறித்து பெருமளவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் சற்றுமுன் பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்திரளானோர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்றைய தினம் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்களுடன், பேராசிரியர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

