ஒன்பதாவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் போராட்டம் - நாடு முழுவதிலுமிருந்து குவியும் ஆதரவுகள்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த வாரம் சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டி இன்றுடன் 9 ஆவது நாளாக போராடி வருகின்றனர்.
இதேவேளை, நாளுக்கு நாள் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
காலிமுகத்திடல் போராட்டத்துக்கு நாடு முழுவதிலும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக காலியிலும் இன்று 2 ஆவது நாளாக மக்கள் எழுச்சிப்போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, கண்டியிலும் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்றது.
இன்று இரவு யாழ்ப்பாண இளைஞசர்களும் தமது ஆதரவினை தெரிவிக்கும் முகமாக தீப்பந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.





