அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அணிதிரள்வோம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Tamils Jaffna SL Protest
By Sathangani Jul 05, 2025 11:06 AM GMT
Report

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள உணர்வுபூர்வமான போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் பங்கேற்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.

எதிர்வருகின்ற, 24 மற்றும் 25ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா (சங்கிலியன் பூங்கா) சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தலில்  பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (05) நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : சர்வதேச நீதி கோரும் விஜய் தணிகாசலம்

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : சர்வதேச நீதி கோரும் விஜய் தணிகாசலம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இந்த அரசு பரிணமித்துள்ளது.

இந்த அரசினது இரும்புச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பறிக்கப்பட்ட எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை உணர்வுபூர்வமாய் மனங்கொள்ள வேண்டியது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அணிதிரள்வோம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Protest Demanding Release Of Political Prisoners

சுதந்திர வாழ்வின் உரிமைக்காக நித்தமும் போராடிக் கொண்டிருக்கின்ற எமது தமிழினத்தை சட்டத்தின் பெயரால் அடக்கி ஒடுக்குவதற்கென்று ஆதிக்க அரசினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் இனவிடுதலையின் பெயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நாம் மறந்து விடலாகாது.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெவ்வேறு காலப்பகுதிகளில் மனிதாபிமானமின்றி கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான எமது உறவுகளை நினைவேந்துவதுடன், 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இன்றி இன்றுவரை சிறைக்கூடங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சுதந்திர விடியலுக்காக கரம் கோர்த்து குரலுயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜூலைக் கலவரம்

தமிழினத்தை வேரறுக்கும் வரலாற்றின் முதல் அத்தியாயமான 'ஜூலைக் கலவரத்தின் சிறைப்படுகொலை நாள் ஜூலை 25 ஐ முன்னிறுத்தி, " சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட உயிர்களுக்கு சிரம் சாய்த்து நினைவேந்தி...! இன்று வரை சிறையிலே வாடும் உறவுகளின் விடுதலைக்கு வழியமைப்போம்...! "

எனும் தொனிப்பொருளில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உணர்வுபூர்வமான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க குரலற்றவர்களின் குரல்' அமைப்பு சகல தமிழ் சமூகங்களிடமும் அழைப்பு விடுக்கின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அணிதிரள்வோம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Protest Demanding Release Of Political Prisoners

நினைவேந்தலை வலுப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்க ஈழத்து சூழலில் மட்டுமன்றி அயலகமான தமிழகம், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பன்னாட்டு தமிழ் உணர்வாளர்கள், தமிழர் அமைப்புகள், மனித உரிமைவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், ஜனநாயக சக்திகள் என அனைத்து தரப்பினரிடமும் அந்தந்த நாடுகளில் இதேபோன்ற உணர்வுபூர்வ கவனக் குவிப்பு நிகழ்வுகளுக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் உரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.

எதிர்வருகின்ற, 24 மற்றும் 25ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா (சங்கிலியன் பூங்கா) சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தல் செயற்பாட்டில் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தவறாது பங்கேற்று, " ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்கு அணி திரண்டு வலுச் சேர்ப்போம்” என தெரிவித்தார்.

செம்மணி சாட்சியங்களை சிதைக்க தயாராகும் அவலம்! எச்சரித்த தமிழ் அரசியல் தலைமை

செம்மணி சாட்சியங்களை சிதைக்க தயாராகும் அவலம்! எச்சரித்த தமிழ் அரசியல் தலைமை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்