கொட்டும் மழையிலும் 26ஆவது வாரமாக தொடரும் மயிலிட்டி மக்களின் நிலமீட்புப் போராட்டம்!

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna Protest
By Theepan Oct 16, 2026 10:55 AM GMT
Report

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணம் - மயிலிட்டி மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம்  26ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.

கொட்டும் மழை உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் இன்று (16.10.2026) குறித்த போராட்டம் நடைபெற்றது.

தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடிவரும் மயிலிட்டி மக்கள், தமது நீண்டகாலக் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போராட்டத்திற்கு உரிய தீர்வு 

பல வாரங்களாகத் தொடரும் இப்போராட்டத்தின் மூலம் தமது காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொட்டும் மழையிலும் 26ஆவது வாரமாக தொடரும் மயிலிட்டி மக்களின் நிலமீட்புப் போராட்டம்! | Protest For Land Release In Jaffna

இந்தநிலையில், விரைவில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வருகையின்போது, 26வாரங்களாகத் தொடரும் தமது போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மயிலிட்டி மக்கள் காத்திருக்கின்றனர்.

தமது பூர்வீக மண்ணை மீளப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன், மயிலிட்டி மக்களின் போராட்டம் 26ஆவது வாரத்தையும் கடந்து தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுக மேம்பாட்டிற்காக பெருந்தொகை நிதியுதவி கொடுத்த அமெரிக்கா

கொழும்பு துறைமுக மேம்பாட்டிற்காக பெருந்தொகை நிதியுதவி கொடுத்த அமெரிக்கா

சவுதி அரேபியாவுக்கான சிறிலங்கன் விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!

சவுதி அரேபியாவுக்கான சிறிலங்கன் விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016