கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம்
Sri Lanka Army
Tamils
Jaffna
Protest
By Theepan
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணம் வசாவிளான் மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் தொடர்ந்தது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் தமது பூர்வீகக் காணிகளை விடுவித்து, அவற்றில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டங்கள்
இதேவேளை, பலாலி உள்ளிட்ட பகுதிகளில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மற்றும் பலாலி சந்தி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி