உலகின் முன்னணி நாடுகளில் கோட்டாபயவுக்கு எதிர்ப்பலை
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம்
இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு காரணமான சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்குபடுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு சிறிலங்கா தொடர்பாக முன்னர் விடுத்திருந்த அறிக்கைக்கு அமைய, சர்வதேச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படவேண்டும் எனக்கோரியே இந்தப் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
நாளை நியூயோர்க், லண்டனில்
சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால் இடம்பெறவுள்ள இந்தப்போராட்டங்களின் வரிசையில் நாளை திங்கட்கிழமை நியூயோர்க், லண்டன் ஆகிய நகரங்களில் ஒன்று கூடல்கள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் புதன்கிழமை பிரான்சிலும், அதற்கு மறுநாள் வியாழக்கிழமை கனடாவிலும் இந்தப் போரட்டங்கள் நடைபெறவுள்ளன.
இவ்வாறான போராட்டங்கள் ஏனைய நாடுகளிலும் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.
