சம்பள உயர்வு கோரி முல்லை மாவட்டத்திலும் பணிப்பகிஸ்கரிப்பு!
சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றையதினம் (01) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பினை மேற்கொண்டிருந்தனர்.
நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளின் சுகாதார ஊழியர்களும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை ஏழு மணி தொடக்கம் 12:00 மணிவரை தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள்.
"தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்": பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் (காணொளி)
முன்மொழியப்பட்ட கோரிக்கைகள்
முல்லை தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, வெலிஓயா,ஒட்டி சுட்டான், மல்லாவி, மாங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் சிற்றூழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த பணிப்புறக்கணிப்பின் போது அவர்களால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளாவன,

- சுகாதார ஊழியர்களுக்காக 5 நாள் வேலைத்திட்டத்தை வழங்கல். (வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள்)
- மத்திய அரசின் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களிற்காக மேலதிக நேர கொடுப்பனவு / விடுமுறை தின சம்பள வரையறையை நீக்குதல்.
- மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக ரேட் முறையை வழங்குதல் (இதுவரையிலும் வைத்தியர், தாதியர், இடை நிலை வைத்தியர் மற்றும் துணை வைத்தியர் சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.)
- தற்போது வழங்கப்படும் ரூபா.1000/- விசேட கொடுப்பனவினை ரூபா.7000/- வரை அதிகரித்துக்கொள்வது, சீருடை கொடுப்பனவினை ரூபா.15000/- வரை அதிகரித்துக்கொள்வது.
- முறையான இடமாற்ற முறை மற்றும் இடமாற்றத்தினை விரைவாக வழங்குதல்.
- ஓய்வூதிய சம்பளத்தை உறுதிப்படுத்துதல்.
- ஊழியர் பற்றாக்குறையின் போது ஆட்சேர்ப்பு செய்தல் / பதவி உயர்வுகள் வழங்குவதுதொடர்பாக முன் நடவடிக்கைகளை எடுத்தல்.
- மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்வதல் மற்றும் சத்திரசிகிச்சைகளை வழமைப் போல் நடாத்துதல்.
- நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதற்காக ரூபா.20,000/- இனால் சம்பளத்தை அதிகரித்தல்.

மேற்கண்ட ஒன்பது கோரிக்கைகளையும் முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 9 மணி நேரம் முன்