மண் உரிமம் வழங்கக் கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!
மண் உரிமம் வழங்கக் கோரி மட்டக்களப்பு கனியவள திணைக்களத்துக்கு முன்பாக இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மண் உரிமம் வைத்திருந்தவர்களது உரிமங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் மண்ணுரிமம் வழங்குவதில் புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அமைச்சர் நசீர் அஹமட் அவரின் உருவப் பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
எது எப்படி இருந்தாலும் இவர்களது நடவடிக்கை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், சதாசிவம் வியாழேந்திரன் போன்றவர்கள் தங்களை புறக்கணித்து உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மாத்திரம் தங்களுக்கு உதவி செய்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
