வேலன் சுவாமிகள் மீதான தாக்குதல்! பிரித்தானியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்
United Nations
Sri Lankan Tamils
Sri Lanka
By Independent Writer
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் 21ம் திகதியன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உட்பட 5 தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது பிரித்தானியா பிரதமர் அலுவலகத்தின் முன்பாக இன்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அதனை கண்டித்தும் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரியும் தாயகத்தில் இன்று 03.01.2026 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரின் கையெழுத்துடன் இந்தவிடயம் தொடர்பான மனு ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





