மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் பேராட்டம்

Mannar Sri Lanka SL Protest Drugs
By Sathangani Jan 26, 2024 10:53 AM GMT
Report

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு பேரணியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மத தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பவதாரணியின் உடலை பார்க்க நேரில் வந்த யுவன்

பவதாரணியின் உடலை பார்க்க நேரில் வந்த யுவன்

காணி சுவீகரிப்பு 

மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது. இதன் போது  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். அவையாவன ...

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் பேராட்டம் | Protest In Mannar With Various Demands

மன்னார் மாவட்டத்தில் அரச படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள மக்களிடம் கையளிப்பதோடு பொதுவான காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்களின் அமைதியான வாழ்விற்கு வழி வகுத்தல், பல அரச காணிகள் தவறான செயற்பாடுகளினால் மக்களின் வளர்ச்சியினை பாதிக்க கூடியதாக ஒரு சிலர் தமதாக்கி உள்ளனர்.

மேலும் வேறு மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் முகவர்கள் மன்னாரில் உள்ள மக்களினதும், பொதுக் காணிகளையும் வாங்கி தமதாக்கிக் கொள்கின்றனர். இதனால் வருங்காலத்தில் மக்களுக்கும், அவர்களுடைய சந்ததியினருக்கும் ஏற்படவிருக்கும் அபாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக தலைமன்னார் துறை காணி, நாயாற்றுவெளி காணி, பேசாலை பகுதிகளில் குறித்த பிரச்சினை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய காணிகள் அபகரிக்கப்பட்டு சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுவதால் இதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தது பாடகி பவதாரணியின் உடல் (புதிய இணைப்பு)

சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தது பாடகி பவதாரணியின் உடல் (புதிய இணைப்பு)

கனிய மண் அகழ்வு 

மன்னார் தீவில் அரச மற்றும் தனிப்பட்ட முகவர்களால் 4,500இற்கு மேல் துளைகள் 50 அடிக்கு கீழ் இடப்பட்டு கனிய மணல் அகழ்வு இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்பட்ட மண்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் மன்னார் தீவில் அனைத்து பிரதேசங்களிலும் கனிய மணல் அகழ்வு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கனிய மண் அகழ்வினால் நிலமேற்பரப்பு மிகவும் இறுக்கமற்று போகிறது. தொடர் நடவடிக்கைக்காக இக் கனிய மண் ஆய்வு செய்ய அவுஸ்திரேலியாவிலுள்ள தனிப்பட்ட நிறுவனங்களுக்கு இம்மண்ணை விற்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் பேராட்டம் | Protest In Mannar With Various Demands

தற்போது மன்னார் தீவின் 63 சதவீத நிலப்பரப்புகள் கடல் மட்டத்தின் கீழ் உள்ளது. இக்கனிய மண் அகழ்வு தொடருமானால் காலநிலை காரணமாக மன்னார் தீவு முற்று முழுதாக நீரில் மூழ்கும் அபாய நிலை காணப்படுவதால் இக் கனிய மணல் அகழ்வு உடன் தடைசெய்யப்பட வேண்டும். இந்த நடவடிக்கையினால் மன்னார் தீவில் உள்ள இயற்கை குடிநீர் முற்றாக பாதிக்கப்படுவதுடன் மன்னார் தீவினுள் காணப்படும் பனை, தென்னை போன்ற பயன் தரும் மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும்.

இதனால் மக்கள் தீவினுள் வாழ முடியாத நிலை ஏற்படும். எனவே இச் செயற்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

மேலும் மன்னார் தீவினுள் இதுவரை 36இற்கு மேற்பட்ட உயர் மின் வலு காற்றாடிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்தும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் 100 இற்கும் மேற்பட்ட உயர்மின் வலுக் காற்றாடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மன்னார் தீவை உயர் மின் வலுக்காற்றாடிகளின் பண்ணையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மின்வலு காற்றாடிக்கு 6.5 ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரிக்கவும் விசேட சட்ட மூலம் இந்த நிலங்களை அரசுடமையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

98 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள ராஜபக்ச குடும்பம் : நாமல் சுட்டிக்காட்டு

98 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ள ராஜபக்ச குடும்பம் : நாமல் சுட்டிக்காட்டு

போதைப்பொருள் பாவனை

இவ்வாறு இந்நிலங்கள் சுவீகரிக்கப்படுவதனால் மன்னார் தீவினுள் வசிக்கும் மக்களின் இருப்பு நிலம் கேள்விக்குறியாகிவிடும். அத்தோடு மக்கள் பலவந்தமாக இடம்பெயர்வு செய்யப்படும் நிலை உருவாகலாம்.

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் பேராட்டம் | Protest In Mannar With Various Demands

30 வருடங்களுக்கு மேலாக இம்மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு யாவற்றையும் இழந்து சீவிப்பதற்கு கஷ்டப்படும் நிலையில் இச் செயற்திட்டங்கள் நடைபெறுமானால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இம்மக்கள் மன்னார் தீவை விட்டு வெளியேறும் ஒரு துர்பாக்கிய நிலை ஏற்படும். எனவே அதை நிறுத்தி மன்னார் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தற்போதைய நாட்டின் நிலைமையில் போதைப்பொருள் பாவனை மிகவும் உயர்வான மட்டத்தில் காணப்படுகின்றது. இதில் முக்கியமாக இளையோர் மட்டத்தில் போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் இப்போதைப்பொருட்கள் நாளாந்தம் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டாலும் போதைப்பொருள் கடத்தல் சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. இதனால் தற்போது பாடசாலை மட்டத்தில் இருந்து போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

அரச அதிகாரிகள் மீது ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அரச அதிகாரிகள் மீது ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

மகஜர் கையளிப்பு 

எமது மாவட்டத்தைச் சுற்றி இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைக்காக கடற்படை, தரைப்படை, காவல்துறை காணப்பட்டாலும் போதைப்பொருள் விற்பனை சாதாரணமாக காணப்படுகிறது.

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் பேராட்டம் | Protest In Mannar With Various Demands

எனவே இப் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்யுமாறும் கேட்டுக்கொள்வதோடு இதனால் கல்வி மற்றும் கலாச்சார சீரழிவுகளும் ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தற்போது மன்னாரில் அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இலங்கையின் வரைபடத்தில் இருந்து மன்னார் தீவை முற்றாக அழிப்பதை நோக்கி நகர்கின்றது.

எனவே மன்னார் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை தயவு கூர்ந்து கவனித்து எங்களின் நிலம்,உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” எனக் குறிப்பிட்டனர்.

இதேவேளை போராட்டத்தின் இறுதியில் அதிபருக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மகஜர்  கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் சடுதியான வீழ்ச்சி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் சடுதியான வீழ்ச்சி



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011