முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டம் - அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு
protest
mullaitivu
journalist
By Vanan
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸவச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து இன்று (28) முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.
இன்று (28) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு நகரப்பகுதியில் இடம்பெறும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கிடைக்கவும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் ஒன்றிணையுமாறு முல்லைத்தீவு ஊடக அமையத்தினர் கோரியுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்