போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம்

Sri Lanka Police Mullaitivu SL Protest
By Sathangani Apr 06, 2025 11:35 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக இன்று (06) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருவதாகவும் அதனை உடனடியாக உரியவர்கள் கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினர் மற்றும் கிராம மக்களை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மோடியின் ஒப்பந்தங்கள் குறித்து அம்பலமாகப்போகும் உண்மைகள்!! வெளியிடப்பட்ட அறிவிப்பு

மோடியின் ஒப்பந்தங்கள் குறித்து அம்பலமாகப்போகும் உண்மைகள்!! வெளியிடப்பட்ட அறிவிப்பு

பதாதைகளை தாங்கியிருந்தனர்

அத்துடன் ”மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம்“, “உழைத்து வாழப்பழகு ஊரை அழித்து வாழாதே“, “போதைப்பொருளை ஒழிப்போம் விசமிகளை அழிப்போம்“, “போதையால் ஊரை அழிக்கிறாயே உன் சந்ததி மட்டும் நிலைத்து வாழுமா“, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம் | Protest In Mullaitivu Against Drug Abuse

இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக அடையாளப்படுத்தப்பட்ட மூன்று வீடுகளுக்கு சென்ற மக்கள் அவர்களது வீட்டு வாசல்களில் பதாதைகளையும் காட்சிப்படுத்திவிட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் இந்திய பிரதமர்

பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் இந்திய பிரதமர்

டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு : அமைச்சர் அறிவிப்பு

டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு : அமைச்சர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்