18ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் நில மீட்பு போராட்டம்
யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் இராணுவம் கையகப்படுத்திவைத்துள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் குறித்த நிலமீட்பு போராட்டம் இன்று (18.10.2026) 18ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கோரிக்கை
நீண்டகாலமாக தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் பலாலி பகுதியை சேர்ந்த மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 18ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |