இலங்கையில் அடுத்த வாரம் திடீர் கிளர்ச்சி..!

Gotabaya Rajapaksa SL Protest
By Vanan Jul 08, 2023 02:37 PM GMT
Report

சிறிலங்காவின் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச தனது அதிகார மையத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சியால் அதாவது அரகலய எனப்படும் போராட்டங்களால் நாட்டை விட்டு தப்பியோடிய ஒரு வருட நிறைவு நாள் அடுத்த வாரம் வர இருக்கிறது.

இந்தப் பின்னணியில் நாட்டில் மீண்டும் கிளர்ச்சியை உருவாக்கி, நாட்டை முடக்க திட்டங்கள் போடப்படுவதாக சிறிலங்காவின் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட ஆலோசனைகள்

இலங்கையில் அடுத்த வாரம் திடீர் கிளர்ச்சி..! | Protest In Sri Lanka Protests Current Situation

இவ்வாறான கிளர்ச்சிகளை நடத்துவது தொடர்பான கூட்டம் ஒன்று, கடந்த வாரம் கண்டி அல்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நடத்தப்பட்டதாகவும் உத்தேச கிளர்ச்சியின் போது சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல் துறையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விசேட ஆலோசனைகள் அந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறிக் கொள்கிறார்.

இவ்வாறு தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலை விழா ஒன்றுக்காக கொள்வனவுக் கட்டளைகள் வழங்கப்பட்ட ஆயிரம் உணவுப்பொதிகளை கிளர்ச்சிக்காரர்களுக்குரிய உணவுப் பொதிகளென கருதிய அரசாங்கம் திடீரென சகட்டுமேனிக்கு கலவரப்பட்டு, அச்சமடைந்து பாதுகாப்பு கெடுபிடிகளை செய்து இறுதியில் அந்த உணவுப்பொதிகள் நாறிய அனுபவங்களும் இருக்கின்றன.

இந்த நிலையில், இப்போது ஜூலை கிளர்ச்சிக்கு கண்டியில் ஒத்திகை என்ற புதிய புரளிகள் கிளப்பப்படுவதாக தெரிகின்றது.

எனினும் அடுத்த வாரத்தில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட ஒரு வருட நிறைவின்போது போராட்டங்கள் இடம்பெறக்கூடும் என்பதையும் மறுத்துக் கொள்ள முடியாது.

இதே போல நாட்டை முடக்குவதற்காக பல்வேறு குழுக்கள் எதிர்வரும் காலத்தில் நாடளாவிய பணி புறக்கணிப்பு போராட்டங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் மூலம் தமக்குத் தெரிய வருவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.



ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025