கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆசிரியர்களுக்காக போராடும் பெற்றோர்கள்!
ஆசிரியர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பாடசாலைகளில் பெற்றோர்களால் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா வெளிக்குளம் வித்தியாலயம், தரணிக்குளம் வித்தியாலயம், சைவப்பிரகாசா மகளீர் வித்தியாலம், கந்தபுரம் வாணி வித்தியாலம், விபுலாநந்தா கல்லூரி, தமிழ் மத்திய மகாவித்தியாலம், பூந்தோட்டம் மகாவித்தியாலம் உட்பட 10 ற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிரியர்களின் சம்பள முரன்பாட்டினை உடனடியாக தீர்க்குமாறும், வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்கு 6 வீத நிதி ஒதுக்கீட்டை செய்யுமாறும், கோரிக்கைகளை முன்வைத்ததுடன், அவர்களுக்கு ஆதரவான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இன்றைய தினம் வவுனியாவில் மழை பெய்து வந்த நிலையில் அதனையும் பொருட்படுத்தாமல் குறித்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், கிராம அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.