நாளை மலையகம் முடங்கும்! மலையக ஆசிரிய தொழிற்சங்கங்களும் பூரண ஆதரவை வெளிட்டுள்ளனர்

srilanka people protest press meet
By Vasanth Feb 04, 2021 12:23 PM GMT
Report

  தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி நாளைய (05) தினம் முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி தொழிற்சங்கம் வர்க்க இன மத மொழி பேதம் பாராமல் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

இதனால் கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளின் பல தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவிப்பதனாலும் நாளைய தினம் மலையகத்தில் முழு அர்தாலாக இருப்பதனாலும் நாளை மலையகம் முடங்கும் என இன்று (04) சுதந்திர தினத்தில் ஹட்டனில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் தொழிற்சங்க பொதுச்செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

முன்னாள் மத்திய மாகாண உறுப்பினரும் கல்வியியல் காங்கிரஸ்ஸின் பொறுப்பாளருமான கணபதி கணகராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்புக்கு ஆசிரியர் விடுதலை முன்னணி, பொதுச் செயலாளர் எஸ்.டி.நாதன் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர மணிவண்ணன் மலையக ஆசிரியர் முன்னணியின் இணைப்பாளர் கின்ஸிலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒன்று கூடினோம். அதில் சகல ஆசிரிய தொழிற்சங்கங்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.

சிங்கள ஆசிரிய தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. காரணம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை என்பது சாதாரணமாக சம்பள பிரச்சினையும் தாண்டி ஒரு சமூக பிரச்சினையாக மாறியுள்ளது.

கம்பனிகள் தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளனர்.

ஆகவே ஆசிரியர் சமூகம் என்ற வகையில் நாங்கள் இதனை வேடிக்கை பார்த்து இருக்க முடியாது நாட்டில் ஏனைய பிரதேசங்களை ஒரு பிரச்சினை வரும் போது அர்தாலாக நடத்தி அப்பிரச்சினையினை வெற்றி பெருகின்றனர்.

ஆனால் மலையகத்தில் அவ்வாறான ஒரு நிலை காணப்படுவதில்லை ஆனால் இன்று அவ்வாறான ஒரு நிலை அதனை ஏற்படுத்துவதற்கு அனைத்து ஆசிரிய சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்குகின்றோம் எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்து போராட்டத்திற்கு சுகயீன லீவு அறிவித்து ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து ஆசிரியர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் நாயகம் எஸ்.டி.நாதன். கருத்து தெரிவிக்கையில்..

நாங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பதில் பெருமையடைகின்றோம் இந்த போராட்டத்தில் சிங்கள ஆசிரியர்கள், அதிபர்கள் கல்விசார் ஊழியர்கள் ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளார்கள் அதனை நாங்கள் வரவேற்கின்றோம் ஆகவே சுகயீன லீவு அறிவித்து இந்தபோராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் அதிபர் ஆசிரியர்கள் அனைத்து பிரிவினரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உபதலைவரும் ஆசிரிய கல்வியியல் காங்கிரஸ்ஸின் பொறுப்பாளருமான கணபதி கணகராஜ் கருத்து தெரிவிக்கையில், இன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையினை ஒரு சமூக பிரச்சினையாக கருதி ஆசிரியர் தொழிற் சங்கங்கள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

எனவே தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கமைய ஆசிரியர் அதிபர்கள் சுகயீன லீவு கோரி இந்த போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் அதே நேரம் பெற்றோர்கள் நாளை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்வதோடு நேற்று பல தரப்பினர் எம்மிடம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அது மாத்திரமின்றி முச்சக்கரவண்டி சங்கங்கள், தனி பேருந்து சாரதிகள், வர்த்தகர்கள் என பலரும் இந்த போராட்டத்தினை முன்னின்று நடத்துவதற்கு முன்வந்துள்ளனர் ஆகவே இந்த போராட்டம் மலையகத்தில் பூரண அர்த்தாலாக மாறும் என இவர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026