யாழ். அரியாலையில் இன்றும் போராட்டம்: அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
Law and Order
By Kanooshiya
யாழ். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியாலை மக்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி, கிழக்கு அரியாலை, காரைமுனங்கு பிரதேசத்தில் குப்பை எரியூட்டல் நிலையங்களை அமைக்கவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
A9 வீதியை மறித்து இன்று பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தின் இடையே காவல்துறையினர் இடைமறித்தனர்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்