தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரிப் போராட்டம்
Sri Lankan Tamils
SL Protest
By Vanan
முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை வெளியேறுமாறு கோரிப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இந்தப் போராட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் அணிதிரளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் அழைப்பு
மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து வெளியேறுமாறு பல தடவைகள் அழுத்தம் கொடுத்தும் இதுவரை பயன்கிட்டவில்லை.

இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 7 மணி நேரம் முன்