ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி பிரிட்டனில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)
இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீதி கோரி தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை என்ற அமைப்பினால் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்கள் ஏற்கனவே ராஜபக்ச குடும்பத்தால் சுரேஷ் சாலி மற்றும் பிள்ளையான் ஆகியோருடன் இணைந்து திட்டம் தீட்டப்பட்டு நடாத்தப்பட்டதாக channel 4 அண்மையில் ஆதரங்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில் மனிதவுரிமைக்காகவும் தமிழ் மக்களுக்கான நீதிக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டு சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்துவதற்கு பிரித்தனிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அம்பலத்துக்கு வந்த நாடகம்
கோட்டபய ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நடாத்திய நாடகம் அம்பலத்துக்கு வந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்காக நியாயமான முறையில் குரல் கொடுத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலும் நியாயமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர் .