ஆசனங்களை பெறுவதே தமிழ் அரசியல் வாதிகளின் நோக்கம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Tamils Kilinochchi Vavuniya
By Shadhu Shanker Oct 30, 2024 03:21 PM GMT
Report

தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களை பெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டு செயற்படுவதாக வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சங்கத்தினரால் வவுனியா (Vavuniya) பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அம்பாறை மக்களுக்கு காவல்துறையினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

அம்பாறை மக்களுக்கு காவல்துறையினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

தமிழ் வேட்பாளர்கள் 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,  ‘‘ இம்முறை தேர்தலில் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் வேட்பாளர்கள் பேரம் பேசக்கூடிய ஒரு சக்தியாக மக்களின் நன்மைகருதி ஒன்றிணையவில்லை.

ஆசனங்களை பெறுவதே தமிழ் அரசியல் வாதிகளின் நோக்கம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குற்றச்சாட்டு | Protests Kilinochchi Vavuniya For Missing Persons

ஆசனங்களை பெறுவதனை மாத்திரம் நோக்கமாக கொண்டு ஏட்டிக்கு போட்டியாக தனித்தனியாக தேர்தலில் நிற்கின்றனர். இப்படி நின்று யாருக்காக நீங்கள் கதைக்கப்போகின்றீர்கள்.

நீங்கள் ஒரு அணியாக எப்போதாவது திரண்டிருக்கிறீர்களா. உங்களுக்குள்ளேயே போட்டியிட்டு குழப்பங்களை ஏற்ப்படுத்தி கட்சிகளை பிளவுபடுத்தி தமிழ்த் தேசியத்தையே இன்று இல்லாது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை ஒன்றிணைத்து கலந்துரையாடி ஒற்றுமையாக எப்போது பயணித்துள்ளீர்கள். இந்த தேர்தலில் அதிகரித்துள்ள சின்னங்களால் தமிழ் மக்கள் குழப்பநிலையை அடைந்துள்ளனர்.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை : மன்னார் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை : மன்னார் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிதறடிக்கப்படும் வாக்குகள்

சங்கு, வீடு சுயேட்சை, சைக்கிள் என்று பலகட்சிகள். பல சுயேட்சைகுழுக்கள் போட்டியிடுகின்றது. இதனால் அரசியலை பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் நாடாளுமன்றம் செல்லக்கூடிய நிலமையே இன்று ஏற்பட்டுள்ளது.

ஆசனங்களை பெறுவதே தமிழ் அரசியல் வாதிகளின் நோக்கம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குற்றச்சாட்டு | Protests Kilinochchi Vavuniya For Missing Persons

வடக்கில்12 ஆசனங்களை பெறுவதற்காக 800 ற்கும் மேற்ப்பட்டவர்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு யார் வாக்களிப்பது. நண்பர்கள் உறவினர்கள் வாக்களித்தால் அந்த வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.

இதன் மூலம் சிங்கள கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றும் நிலைமையினை நீங்களே உருவாக்கப்பார்க்கின்றீர்கள். பணத்தை ஏன் இவ்வாறு வீணடிக்கிறீர்கள் அதனை மக்களுக்கு வழங்குங்கள்.நீங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறிவிட்டு இன்னும் கீழ் நிலைக்கே மக்களை தள்ளப்போகின்றீர்கள்‘‘ என்று தெரிவித்தனர்.

 கிளிநொச்சி

இதேவேளை, கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தீர்வை நோக்கிய கவனயீர்ப்பு போராட்டமொன்றும் இன்றையதினம் (30) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டமானது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. மாதாந்தம் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு பகுதிகளில் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் சுயநலவாதிகள்! குற்றஞ்சாட்டும் கட்சித் தரப்பு

தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் சுயநலவாதிகள்! குற்றஞ்சாட்டும் கட்சித் தரப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!              

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016