பாடசாலை மாணவிகளுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள திட்டம்
நாட்டிலுள்ள பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை (sanitary napkin) இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் (Susil Premajayantha) முன்மொழிவுக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் 04 மில்லியன் எனவும் வயதுக்கு வந்த மாணவிகள் சுமார் 1.2 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
800,000 மாணவிகளுக்கு
அந்த மாணவிகளில், மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள், மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் மாணவிகளுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை 2024 ஏப்ரல் முதல் 800,000 மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச சுகாதார துவாய்கள் வழங்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |