எம்.பிக்களின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறைமா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இது தொடர்பாக ஊடகமொன்று அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் வினவிய போது, “எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இது தொடர்பாக கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்புடைய கோரிக்கைகளைச் சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிக்கை வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை பாதுகாப்பு
அந்த அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், தேவைப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும், ஆளுங்கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் பாதுகாப்பு தொடர்பாக எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு காவல் நிலைய மட்டத்தில் விசேட பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்