மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளிவந்த தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி சில கட்டுப்பாடுகளுடன் முழுமையாக இலங்கை திறக்கப்படவுள்ள நிலையில், அமைச்சரவையில் முழுமையான மாற்றத்தை கொண்டுவர அரச தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்துவரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதன் பின்னரே அமைச்சரவையில் முழுமையாக மாற்றம் ஏற்படுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது.
இருப்பினும் இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரே பெரும்பாலும் அமைச்சரவையில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை முழுமையான மாற்றம் குறித்து ஆரம்பத்தில் இணங்காத போதிலும் தற்போது அவர் விருப்பம் வெளியிட்டிருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் கடந்த ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதியே இறுதியாக அமைச்சரவையில் பகுதியளவான மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.