மாகாண சபைத் தேர்தல் நெருக்கடி : அநுர அரசின் புதிய முடிவு
மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளையும் விரைவில் கூட்டி கருத்துக்களைப் பெற திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து இன்னும் திட்டவட்டமான யோசனை இல்லாததால், அது குறித்து ஒரு முடிவை எட்டுவதற்காக இந்த சர்வகட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
குழப்பமான நிலையில் மாகாண சபைச் சட்டம்
மாகாண சபைச் சட்டம் தற்போது குழப்பமான நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பழைய சட்டம் இனி இல்லை என்றும் புதிய சட்டம் முறையாக உருவாக்கப்படவில்லை என்றும் அபயரத்ன குறிப்பிட்டார்.
ஒன்பது மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தற்போது, அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |