மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய பேச்சு!
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பில் தனக்கு தீர்மானம் எடுக்க முடியாது எனவும் அது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07.11.2025) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி உரை நிகழ்த்தியிருந்தார்.
உரையை நிறைவு செய்யும் தருவாயில் எதிர்க்கட்சிகள் மாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு கோரிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முறைமை இன்றில்லை. அதற்கான எல்லை நிர்ணயம் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

அந்த அறிக்கையை சமர்ப்பித்த முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவே அதற்கெதிராக வாக்களித்தார்.
நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது எங்களிடம் தேர்தலை கேட்கிறீர்கள்?
சட்டமா அதிபரிடம் ஆலோசனை
இன்று சட்டத்தில் இடமில்லை தேர்தலை நடுத்துவதற்கு. அதனால் 2026 ஜனவரியில் தேர்தல் நடத்துவதற்கான சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என சட்ட மா அதிபரிடம் விளக்கம் கேட்கவுள்ளோம்.

விகிதாசார முறைமையை இல்லாதொழிக்க 15 வருடங்களாக சட்டத்திருத்தம் தொடர்பில் பல கட்சிகள் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தின.
பழைய முறையில் எவ்வாறு தேர்தலை நடத்துவது எனக்கு மாகாண சபை தேர்தலை நடத்த சட்டத்திட்டம் இல்லை. நாடாளுமன்றத்தில் நீங்கள் எனக்கு சட்டத்தை இயற்றி தாருங்கள்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து சட்டமியற்றுங்கள். தேர்தலை நடத்துவோம்” என தெரிவித்துள்ளார்.