நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்
தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் (Shanakiyan Rasamanickam,) தந்தையாரான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் காலமானார்.
இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.
காலமாகும் போது அவரது வயது 67 (பிறப்பு: 13.06.1958, இறப்பு: 07.11.2025) ஆகும்.
பொது மயானத்தில் எரியூட்டப்படும்
அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அன்னாரின் திருவுடல் நாளை (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கத்தின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
You may like this.......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |