மாகாண சபைத் தேர்தல்கள் : EPRLF சமர்ப்பிக்கும் முன்மொழிவுகளும் ஆலோசனைகளும்

Provincial Council Sri Lankan Tamils Parliament of Sri Lanka Suresh Premachandran
By Theepan Nov 06, 2026 10:18 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) சில முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இது குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் நேற்று முன்தினம் (04) வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் மாகாணசபை முறைமை 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த முறைமைக்கான அரசியலமைப்பு அங்கீகாரமும் அதிகாரங்களும் இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டன.

இதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டதுடன், இரு தரப்பினரும் இணைந்து செயற்படுத்த வேண்டிய அதிகாரங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டன.

இந்திய – இலங்கை ஒப்பந்தமானது இலங்கை ஒரு பல்லின, பல்மொழி, பல்மத மற்றும் பல்கலாசார சமூகங்களைக் கொண்ட நாடு என்பதை அங்கீகரிக்கின்றது.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றது.

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஒரு முக்கியமான அங்கமாக முன்மொழியப்பட்ட போதிலும், அது இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் பொருந்தக்கூடிய அதிகாரப் பகிர்வு முறைமையாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் மாநில சட்டவாக்கச் சபைகளை (Legislative Assemblies) ஒத்த, மாகாண மட்டத்திலான சட்டவாக்க அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாக இலங்கையின் மாகாண சபைகள் அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இலங்கை சுதந்திரம் பெற்ற 1948ஆம் ஆண்டிலிருந்து தேசிய மட்டத்தில் நாடாளுமன்றம் மட்டுமே சட்டவாக்க அமைப்பாக இருந்து வந்த நிலையில், 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண மட்டத்திலும் வரையறுக்கப்பட்ட சட்டவாக்க அதிகாரங்களைக் கொண்ட சபைகள் உருவாக்கப்பட்டன. 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாம், 1988ஆம் ஆண்டு வடக்கு – கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்று, மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொண்டு, முதலாவது வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாகத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய அரசியல் இயக்கமாகும்.

இதன் மூலம் அதிகாரப் பகிர்வு முறைமையை நடைமுறையில் கொண்டுவருவதில் வரலாற்றுப் பொறுப்பும் தார்மீக உரிமையும் கொண்ட அரசியல் கட்சியாக EPRLF விளங்குகின்றது.

எனவே, மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான எமது நிலைப்பாடு என்பது வெறுமனே ஒரு தேர்தல் முறைமை குறித்த விவாதம் மட்டுமல்ல. அது அதிகாரப் பகிர்வு, ஜனநாயக உரிமைகள், சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும்.

வங்கிகளில் பெருந்தொகை நிதி மோசடி: இரு முக்கிய வங்கி முகாமையாளர்கள் கைது

வங்கிகளில் பெருந்தொகை நிதி மோசடி: இரு முக்கிய வங்கி முகாமையாளர்கள் கைது

மாகாண சபை முறைமை தொடர்பான EPRLF இன் பொதுவான மதிப்பீடு

மேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையில், மாகாண சபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்து, அவற்றுக்குரிய தேர்தல் முறைமை, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்கள் தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மதிப்பீடுகளையும் முன்மொழிவுகளையும் கீழே முன்வைக்கின்றோம்.

மாகாணசபை என்பது வெறுமனே உள்ளூராட்சி அமைப்புகளைப் போன்ற அடிப்படைச் சேவைகளை வழங்கும் நிர்வாகப் பரவலாக்கல் அலகு அல்ல. மாறாக, 13ஆவது அரசியல மைப்புத் திருத்தத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மாகாண எல்லைக்குள் சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்ட மாகாண சட்டவாக்கச் சபையாகும் (Provincial Legislative Body).

தேசிய மட்டத்தில் நாடாளுமன்றம் எவ்வாறு சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றதோ, அதேபோன்று அரசியலமைப்பின் மூலம் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குள் மாகாணசபைகளும் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படை யில் பல்வேறு மாகாணசபைகள் தமக்குரிய சட்டங்களை இயற்றியுள்ளன.

இத்தகைய சட்டவாக்கச் சபைகள் தமது அதிகாரங்களைச் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கு, நிலையான நிர்வாகத்தையும் தெளிவான பெரும்பான்மை ஆதரவையும் கொண்ட மாகாண அரசாங்கங்கள் அவசியமாகின்றன.

எனவே, மாகாண சபைகளுக்கான தேர்தல் முறைமை, அவற்றின் சட்டவாக்கத் தன்மையையும் அரசியல் பிரதிநிதித்துவத்தின் தேவையையும் கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும்.

மாகாணசபைகளை வெறுமனே பிரதேச அல்லது வட்டார அடிப்படையிலான உள்ளூராட்சி அமைப்புகளாகக் கருதும் தேர்தல் முறைமை பொருத்தமானதல்ல.

எரிபொருள் தட்டுப்பாட்டால் சிக்கலில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

எரிபொருள் தட்டுப்பாட்டால் சிக்கலில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

மாகாணசபை நிர்வாகம், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி

1983 முதல் 2009 வரையிலான உள்நாட்டுப் போரின் காரணமாக இலங்கையிலிருந்து பெருமளவிலான மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் கணிசமானோர் தாயகத்துடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி வருவதுடன், தாயகம் திரும்பு வதற்கும் அங்கு பொருளாதார முதலீடுகளை மேற்கொள்வதற்கும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பி, அவற்றை இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியுடன் இணைப்பதில் புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகள் முக்கிய பங்காற்ற முடியும்.

ஆனால், இத்தகைய முதலீடுகள் உருவாகுவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை, ஜனநாயக நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் நம்பிக்கை ஆகியவை அவசியமாகும்.

புலம்பெயர் மக்களிடையே காணப்படும் அரசியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான அச்சங்களை யும் சந்தேகங்களையும் அகற்றுவதற்கு, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களைக் கொண்ட மாகாணசபை நிர்வாகம் மீண்டும் செயற்படுவது முக்கியமானதாகும்.

மாகாண சபைகள் செயற்படுவதன் மூலம் மாகாண மக்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் ஆகியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஊடாக முன்வைக்கப்படவும் தீர்மானிக்கப்படவும் முடியும்.

இது மாகாண அபிவிருத்தியில் மக்களின் நேரடிப் பங்களிப்பையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தும். மேலும், தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தாமல் முடக்கி வைப்பது, ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே கேள்விக்குள்ளாக்குகின்றது.

சிங்கள மக்களுக்கு தேசிய மட்டத்தில் நாடாளுமன்றம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று தமிழ் பேசும் மக்களுக்கும் தமது பிரதேசங்களை நிர்வகிப்பதற்கும் அரசியல் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கும் மாகாணசபைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

எனவே, சட்டபூர்வமாக உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் காலவரையறையின்றி ஒத்திவைப்பது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதிப்பதுடன், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தடையாக அமையும்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தி, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைப்பதே ஜனநாயகத்தையும் அதிகாரப் பகிர்வையும் வலுப்படுத்துவதற்கான சரியான அணுகுமுறையாகும்.

யாழ். வேலணைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு

யாழ். வேலணைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு

2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தின் குறைபாடுகளும் பாதிப்புகளும்

2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இணைந்த கலப்புத் தேர்தல் முறைமை, அதற்குத் தேவையான தொகுதி எல்லை நிர்ணயச் செயற்பாடுகள் முழுமையடையாத காரணத்தினால், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறைமை நடைமுறைப் படுத்தப்படுவதற்குத் தேவையான எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவுபெறாத நிலையில், தேர்தல்களை நடத்த முடியாத அரசியல் மற்றும் சட்ட ரீதியான நிலைமை உருவாகியுள்ளது.

இதனால் பல ஆண்டுகளாக மாகாணசபைகள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின்றி இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மாகாண மக்களின் ஜனநாயக உரிமை களையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதிப்பதுடன், அதிகாரப் பகிர்வு முறைமையின் செயற்பாட்டையும் பலவீனப்படுத்துகின்றது.

குறிப்பாக, இத்தகைய தொகுதிவாரி தேர்தல் முறைமையை மாகாண சபைகளுக்குப் பொருத்துவது பின்வரும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என EPRLF கருதுகின்றது.

மாகாண சபைகளின் சட்டவாக்க அந்தஸ்து பலவீனப்படுத்தப்படுதல்

மாகாண மட்டத்தில் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் சட்டங்களை இயற்றும் அரசியலமைப்பு அதிகாரத்தைக் கொண்ட மாகாண சபைகளை, பிரதேச அளவில் சேவைகளை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமைக்கு நெருக்கமாகக் கொண்டுசெல்லும் அபாயம் இம்முறைமையில் காணப்படுகின்றது.

இது மாகாண சபைகளின் தனித்துவமான அரசியலமைப்பு மற்றும் சட்டவாக்க அந்தஸ்தை நடைமுறையில் பலவீனப்படுத்தக்கூடும்.

சிறுபான்மை மக்களின் வாக்குப் பலம் சிதறடிக்கப்படுதல்

மாவட்டம் முழுவதும் பரந்து வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் வாக்குப் பலம், சிறிய தொகுதிகளாகப் பிரிக்கப்படும்போது, அவர்களது ஒருங்கிணைந்த அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

குறிப்பாக, ஒரு மாவட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்தாலும் பல தொகுதிகளில் சிறுபான்மையாகக் காணப்படும் சமூகங்களின் வாக்குகள், தொகுதிவாரி தேர்தல் முறையில் உரிய பிரதிநிதித்துவமாக மாற்றப்படாமல் போகலாம்.

இதனால் மாவட்ட அளவில் தமது வாக்குப் பலத்தைக் கொண்டுள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்கும் சிறிய அரசியல் கட்சிகளுக்கும் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் அபாயம் உள்ளது.

மாகாண அளவிலான கொள்கை மற்றும் சட்டவாக்கப் பணிகள் பாதிக்கப்படுதல்

மாகாணசபை உறுப்பினர்கள் மாகாணத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், சட்டவாக்கம் மற்றும் நிர்வாக மேற்பார்வை ஆகியவற்றில் ஈடுபட வேண்டியவர்கள்.

ஆனால், தொகுதிவாரி தேர்தல் முறையின் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள் தத்தமது தொகுதிகளின் உள்ளூர் பிரச்சினைகளுக்கும் தேர்தல் வட்டார நலன்களுக்கும் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டிய அரசியல் சூழ்நிலை உருவாகலாம்.

இதனால் மாகாணம் முழுவதையும் கருத்தில் கொண்ட கொள்கை மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றது.

கலப்புத் தேர்தல் முறைமையால் ஏற்படக்கூடிய அரசியல் ஸ்திரமின்மை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 60:40 என்ற கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட்டு, உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எனினும், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பெரும்பாலான சபைகளில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக, பல சபைகளில் அரசியல் ஸ்திரத்தன்மையுடன் கூடிய நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் சிக்கல்கள் தோன்றின. இதன் மூலம், 60:40 என்ற கலப்புத் தேர்தல் முறைமை, உள்ளூராட்சி சபைகளில் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையையும் நிர்வாக வினைத்திறனையும் உறுதிப்படுத்தத் தவறியுள்ளமை தெளிவாகிறது.

இத்தகைய கலப்பு தேர்தல் முறைமையையே மாகாண சபைகளிலும் நடைமுறைப்படுத்தினால், அங்கும் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகும் அபாயம் உள்ளது.

மாகாணசபைகள் வெறுமனே உள்ளூராட்சி நிர்வாக அமைப்புகள் அல்லளூ அவை அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு முறைமையின் கீழ் இயங்கும் சட்டவாக்க அதிகாரங்களைக் கொண்ட சபைகளாகும்.

எனவே, இத்தகைய சபைகளில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்படுவது, அவற்றின் சட்டவாக்கப் பணிகளையும் கொள்கைத் தீர்மானங்களையும் பாதிப்பதுடன், மாகாண நிர்வாகத்தை வினைத்திறனுடனும் தொடர்ச்சியாகவும் முன்னெடுப்பதற்குப் பெரும் தடையாக அமையும்.

எனவே, மாகாண சபைகளின் தனித்துவமான சட்டவாக்க மற்றும் நிர்வாகப் பொறுப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசியல் ஸ்திரத்தன்மையையும் மக்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தையும் உறுதிப்படுத்தக்கூடிய தேர்தல் முறைமையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாகாணசபைக்கான தேர்தல் காலம்

ஒரு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவுற்றாலோ அல்லது வேறு காரணங்களால் ஒரு மாகாணசபை கலைக்கப்பட்டாலோ அவை கலைக்கப்பட்டதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அம்மாகாணசபைக்கான தேர்தல்கள் நடாத்தப்பட்டு மாகாணசபைகள் இயங்க வேண்டும்.

அந்த காலவரையறையானது மூன்று மாதத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என்பதும் மாகாணசபை தேர்தல் சட்டத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

EPRLF இன் பிரதான கோரிக்கைகளும் முன்மொழிவுகளும்

மேற்குறிப்பிட்ட மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களின் அடிப்படையில், மாகாண சபைத் தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கும் மாகாண சபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாப்பதற்கும் EPRLF பின்வரும் பிரதான முன்மொழிவுகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கின்றது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மீளமைத்தல்

மாகாண சபைத் தேர்தல்களானது நாடாளுமன்றத் தேர்தல்களில் நடைமுறையில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு ஒத்த வகையில், மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும்.

2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்திற்கு முன்னர் நடைமுறையில் இருந்த மாகாண சபைத் தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீளமைப்பதன் மூலம், தற்போதைய தேர்தல் முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையானது, மாவட்டம் முழுவதும் பரந்து வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் சிறிய அரசியல் கட்சிகளுக்கும் தமது வாக்குப் பலத்திற்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது.

அதேவேளை, மாகாண சபைகளில் பல்வேறு சமூகங்கள் மற்றும் அரசியல் கருத்தோட்டங்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படுவதற்கும் இம்முறை உதவும்.

எனவே, மாகாண சபைகளின் தன்மைக்கும் அவற்றின் சட்டவாக்கப் பொறுப்புகளுக்கும் பொருத்தமான தேர்தல் முறைமையாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையே EPRLF வலியுறுத்துகின்றது.

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல்

மாகாண சபைகள் போன்ற சட்டவாக்க அமைப்புகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் மேற்கொள்ளப் படுவதை EPRLF வரவேற்கின்றது.

எனினும், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை மாகாணசபைகளில் மட்டும் நடைமுறைப்படுத்துவது போதுமானதல்ல. இலங்கையின் இரண்டு நிலைகளிலான சட்டவாக்க அமைப்புகளான நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபைகள் ஆகிய இரண்டிலும் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் நாட்டின் தேசிய மற்றும் மாகாண மட்டங்களிலான அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்களும் இளைஞர்களும் உரிய பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பும் உறுதிப்படுத்தப்படும்.

மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக முன்வைத்த உறுதிமொழி களுக்கு அமைவாக, மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

எல்லை நிர்ணயச் செயற்பாடுகள் நிறைவுபெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி, தேர்தல் களை காலவரையறையின்றி ஒத்திவைப்பது ஜனநாயக விரோதமான அணுகுமுறையாகும்.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட ரீதியான தடைகளை நீக்கி, தேர்தல்களை நடத்துவதற்கான மாற்று சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும்.

எனவே, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்திற்கு முன்னர் நடைமுறையில் இருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மீளமைக்கும் வகையில் தேவையான சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இதன் மூலம் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். 

மாகாணசபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் அதிகாரங்களையும் பாதுகாத்தல்

தேர்தல் முறைமையில் மாற்றங்களை மேற்கொள்வது என்ற பெயரில், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங் களையோ அல்லது அவற்றின் சட்டவாக்க அதிகார வரம்புகளையோ சுருக்கும் எந்தவொரு முயற்சியையும் EPRLF நிராகரிக்கின்றது.

மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றுக்கு அரசியல மைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாகவும் பயனுள்ளதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதிகாரப் பகிர்வு என்பது தேர்தல் முறைமையுடன் மட்டும் தொடர்புடைய ஒரு விடயமல்ல. அது நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஜனநாயக நிர்வாகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும்.

எனவே, மாகாண சபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் அவற்றுக்குரிய அதிகாரங் களையும் பாதுகாப்பது இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான அத்தியாவசியமான கடமையாகும்.

ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்போம்

மாகாணசபை முறைமை என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில், குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப் போராட்டத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியலமைப்பு ஏற்பாடாகும்.

அது வெறுமனே நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பல்ல. மாறாக, நாட்டின் பல்லினத் தன்மையை அங்கீகரித்து, அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடமிருந்து மாகாண மட்டத்திற்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கும், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முயற்சியாகும்.

எனவே, மாகாணசபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க மற்றும் நிர்வாக அதிகாரங்களையும் பாதுகாப்பது என்பது ஒரு தேர்தல் முறைமை தொடர்பான தொழில்நுட்ப விவகாரமாக மட்டும் அணுகப்பட முடியாது.

அது அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கோட்பாட்டையும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளையும், இலங்கையின் ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பையும் பாதுகாப்பதுடன் தொடர்புடைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமை, நடைமுறைப்படுத்தப்படுவதற்குத் தேவையான சட்ட மற்றும் எல்லை நிர்ணயச் சிக்கல்களால் மாகாணசபைத் தேர்தல்களை நீண்டகாலமாக முடக்கி வைத்துள்ளது.

இதன் விளைவாக, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண நிர்வாகங்கள் இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கின்றது. இது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை மட்டுமல்லாமல், மாகாண மக்களின் அரசியல் பங்கேற்பையும், அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களில் அவர்களுக்குரிய பங்களிப்பையும் பாதிக்கின்றது.

குறிப்பாக, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், அவர்களின் வாக்குப் பலத்தைச் சிதறடிக்காத மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமாகும்.

அதேவேளை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான உரிய பிரதிநிதித்துவமும் தேசிய மற்றும் மாகாண சட்டவாக்க அமைப்புகள் இரண்டிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூகச் சவால்களை வெற்றிகரமாகக் கடந்து செல்வதற்கு, மத்திய அரசாங்கத்தின் அதிகாரக் குவிப்பைக் குறைத்து, மாகாணங்களின் பங்கேற்பையும் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்துவது அவசியமாகும்.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார மீளெழுச்சி, புலம்பெயர் மக்களின் முதலீடுகளை ஈர்த்தல், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மாகாண நிர்வாகங்கள் இன்றியமையாதவையாகும்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் தொடர்ந்து ஒத்திவைப்பதன் மூலம் நல்லிணக்கத்தையோ தேசிய ஒருமைப்பாட்டையோ கட்டியெழுப்ப முடியாது.

மாறாக, அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதும், அனைத்து இன மக்களினதும் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதுமே உண்மையான நல்லிணக்கத்திற்கான அடித்தளமாக அமையும்.

இந்த அடிப்படையில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் பின்வரும் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றது:

2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை மீளாய்வு செய்து, அதனால் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் முடக்கநிலையை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

2017ஆம் ஆண்டின் திருத்தத்திற்கு முன்னர் நடைமுறையில் இருந்த மாவட்ட அடிப்படை யிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மீளமைத்தல்.

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றி, தேர்தல்களைத் தாமதமின்றி நடத்துவதற்கான கால அட்டவணையை அறிவித்தல்.

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றம் தேர்தல் முறைமையில் எவ்வாறு ஏற்படுத்தப்படுகின்றதோ அதே முறைமையையே, மாகாண சபைகளுக்கான தேர்தல் முறைமையிலும் கடைப்பிடிக்க பரிந்துரைக்கின்றோம்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் அவற்றின் சட்டவாக்க அந்தஸ்தையும் எவ்விதத்திலும் பலவீனப்படுத்தாமல் பாதுகாத்தல்.

மாகாணசபை தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது. மாகாணசபை ஆட்சி முடிவுற்று இவ்வளவு காலத்திற்குள் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றோ இவ்வளவு காலத்திற்குள் அடுத்த சபை பதவியேற்க வேண்டுமெனவோ சட்டமாக்க தவறிவிட்டமையே காரணமாகும்.

எனவே, மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கும், மாகாண சபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்கும் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.

மாகாண சபைகள் வலுப்பெறுவது ஜனநாயகம் வலுப்பெறுவதற்கான வழியாகும். அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்படுவது தேசிய நல்லிணக்கத்திற்கான அடித்தளமாகும். மக்களின் அரசியல் உரிமைகள் மதிக்கப்படுவது இலங்கையின் எதிர்கால ஜனநாயகத்திற்கான உத்தரவாதமாகும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025