அடுத்த ஆண்டு முதல் பாடசாலை நேரங்களில் மாற்றம்: தரங்களின் அடிப்படையில் புதிய நேர அட்டவணை
புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளின் கற்றல் நேரத்தைத் தரங்களின் அடிப்படையில் மாற்றியமைக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், மாகாண பிரதம செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள்,கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய நேர அட்டவணையின்படி,
தரங்களின் அடிப்படையில் புதிய நேரங்கள்
- தரம் 1 மற்றும் 2: காலை 7.30 முதல் முற்பகல் 11.45 வரை.
- தரம் 3 மற்றும் 4: காலை 7.30 முதல் பிற்பகல் 1.00 வரை.
- தரம் 5 முதல் உயர்தரம் வரை: காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் அடுத்தடுத்த தரங்களுக்கு முன்னேறும்போது புதிய பாடத்திட்ட முறையும் படிப்படியாக விரிவுபடுத்தப்படவுள்ளது.
மேலும், தற்போது தரம் 1இல் கல்வி பயிலும் மாணவர்கள் தரம் 5ஐ அடையும் ஆண்டில் அவர்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன், புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்களை 2030ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கும், 2033ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தூதர்கள் வசிக்கும் ஆடம்பரக் குடியிருப்பையும் விட்டுவைக்காத நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |