மாகாணங்களுக்கு இடையில் பயண கட்டுப்பாடு- அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்
srilanka
provincial lockdown
govermant servant
By Jaso
இலங்கையில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கிடையே பணயக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சுகாதார அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரச நிறுவனங்களில் கடமையை மேற்கொள்ள அழைக்கப்படும் அரசு ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க வேண்டுமானால் குறித்த நிறுவனத் தலைவரிடமிருந்து கடிதமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்