பயண கட்டுப்பாடு அமுலான பின்னர் குறுக்கு வீதியால் மாகாண எல்லைகளை கடந்தால் என்ன நடக்கும்?
isolation
police
people
province
By Sumithiran
கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பது தடைசெய்யப்பட்டநிலையில் மாகாண எல்லைகளை குறுக்கு வீதிகளை பயன்படுத்தி கடக்கும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மாகாண எல்லைகளை குறுக்கு வீதிகளை பயன்படுத்தி கடக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக இலங்கையின் குற்றவியல் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் ஊடாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே பாதுகாப்பு தரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்