மாகாணசபை முறைமை ஏமாற்று வேலை - சாடுகிறார் கஜேந்திரகுமார்
மாகாணசபை முறைமை தமிழினத்தை மிக மோசமாக ஏமாற்றுகின்ற முறைமை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
யாழ். வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று பகுதிகளில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் வகையில் காணி அளவை இடம்பெறவிருந்த நிலையில், அது மக்கள் எதிர்ப்பினால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.
காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் அல்லைப்பிட்டி ஜெ 10 சேவகர் பிரிவில் 7 பரப்பு காணியும், மண்கும்பான் ஜெ 11 சேவகர் பிரிவில் 8 பரப்பு காணியும் மற்றும் புங்குடுதீவு ஜெ 24 சேவகர் பிரிவில் 14.2 ஏக்கர் காணியும் கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் நேற்று நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.
இருப்பினும் குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டுச் செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்களம் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.