மாகாணம் விட்டு மாகாணம் செல்ல முயன்ற 266 பேருக்கு ஏற்பட்ட நிலை
corona
sri lankaajith rohana
By Shalini
கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இருந்தாலும், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை இன்னும் நீக்கப்படவில்லை.
இந்த நிலையில் மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 266 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
145 வாகனங்களில் வெவ்வேறு பகுதிகளிலும் இருந்து மேல் மாகாணத்திற்குள் வர முயன்ற 266 பேரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவசர மனிதாபிமானத் தேவையைத் தவிர வேறு யாரும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
மேற்கு மாகாணத்தில் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சோதனைகள் நடத்தப்படுவதா தெரிவித்தார்..
1ம் ஆண்டு நினைவஞ்சலி