மாகாணங்களுக்கு இடையிலான தடை இன்றுடன் நீங்கியது
நாட்டில் தற்போது நடைமுறையிலிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்பட்டது.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென, சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், கொவிட்-19 மரணங்களின் வீதம் மற்றும் தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள, தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அரச தலைவர் எடுத்துரைத்தார்.
அத்துடன், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்துக்கு நடமாடும் சேவையை முன்னெடுக்குமாறும் அனைத்து மக்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறும், ஆலோசனை வழங்கினார்.
இதேவேளை, நாளைய தினம் (01) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.