தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு (Elections Commission - Sri Lanka) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, ஊழியர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், ஊழியருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் விடுமுறை
இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை காலம், தற்காலிக ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையாக கருதப்பட வேண்டும் எனவும், இது ஊழியர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொழிலாளருக்கும் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் விடுமுறை காலம், அவரது பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்காக கடமை நிலையத்திலிருந்து தனது வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டியுள்ள தூரத்தின் அளவு - வழங்க வேண்டிய ஆகக் குறைந்த விடுமுறைக் காலம்
- கி.மீ. 40 அல்லது அதற்குக் குறைவாயின் - அரை நாள் (1/2)
- கி.மீ 40 க்கும் 100 க்கும் இடைப்பட்டதெனில் - ஒரு நாள் (1)
- கி.மீ 100 க்கும் 150 க்கும் இடைப்பட்டதெனில் - 11/2 நாட்கள்
- கி.மீ 150 க்கு அதிகமாயின் - 2 நாட்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
