காணாமற்போன சிறுவர்கள் : பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
Sri Lanka Police
Missing Persons
Sri Lankan Peoples
By Sumithiran
மீரிகமவில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறிய இரண்டு பதின்ம வயது சிறுவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
15 வயதுடைய சிறுவர்கள் இருவரும் சிறுவர் இல்லத்தை விட்டு தெரியாமல் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போன சிறுவர்களை கண்டறிய
சிறுவர் இல்லத்தின் பொறுப்பதிகாரி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காணாமல் போன சிறுவர்களை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த இரண்டு சிறுவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591625 அல்லது 033 – 2273222 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 10 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
19 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்