தடுப்பூசி வழங்கலில் பாரபட்சம் - பணிபகிஷ்கரிப்பில் குதித்தனர் பொது சுகாதார பரிசோதகர்கள்
கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் களத்தில் நின்று பணியாற்றும் தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி வழங்கலில் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து இன்றையதினம் மேல் மாகாணத்தில் பொதுசுகாதார பரிசோதகர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று காலை 7.30 மணி முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார பணியாளர்களுக்கும் குடும்பத்தவர்களுக்கும் தடுப்பூசியை வழங்கவேண்டும் என்ற தங்கள் கோரிக்கை 31 ஆம் திகதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையறையற்ற பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய சுகாதார துறையினரை புறக்கணித்துவிட்டு மேல்மாகாணத்தில் உள்ள மருத்துவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் அஸ்ரா செனகா தடுப்பூசி வழங்கப்பட்டதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திரபாலசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு கம்பஹா களுத்துறையை சேர்ந்த பொதுசுகாதார பரிசோதகர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.