வரலாற்றை மாற்றியது கோட்டாபய அரசு - பகிரங்க குற்றச்சாட்டு
Army
Sri Lanka
Gotabhaya Rajapaksa
Mrs Thalatha Atukorale
By Vasanth
எமது நாடு வேகமாக இராணுவ மயமாக்கலை நோக்கிச் செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை அமைச்சு நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமையை சுட்டிக்காட்டினார்.
இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர், கிராம சேவகர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருவது இதுவே முதல் முறை. 25 மாவட்டங்களுக்கும் பாதுகாப்பை மேற்பார்வையிட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் இராணுவ அதிகாரிகள் கிராம சேவகர் பிரிவுகளுக்கும் அமைச்சின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி