பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் : பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு
தற்போது பயன்பாட்டில் உள்ள, ஆனால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பின்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படாமல் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை வைத்திருப்பவர்கள் அல்லது அது குறித்து அறிந்திருப்பவர்கள், இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
வீதிகளில் இயங்கிக்கொண்டிருக்கும், ஆனால் திணைக்களத்தின் பதிவுத் தரவுத்தளத்தில் இடம்பெறாத மோட்டார் சைக்கிள்கள் குறித்த விவரங்களைச் சேகரிப்பதே இந்த கோரிக்கையின் நோக்கமாகும்.

இது போன்ற மோட்டார் சைக்கிள்கள் குறித்த தகவல்களை அறிந்த பொதுமக்கள், முன்வந்து பின்வரும் இணைப்பின் ஊடாகத் தகவல்களை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdz4QG_ve38MfTKww8fEthyEfqtSw-0z46CksKiB-zWVE4Q0g/viewform
[
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |