தேர்தல் சட்டங்களில் திருத்தம்! ஃபெப்ரல் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை
People
Election
SriLanka
PAFFREL
By Chanakyan
தேர்தல், வாக்களிப்பு முறைமை மற்றும் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களின் அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்புக்களின் ஒன்றான ஃபெப்ரல் இதனைத் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இடம்பெற வேண்டிய மறுசீரமைப்பு பற்றி ஜூன் மாதம் 19ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்களின் அபிப்பிராயங்களை முன்வைக்க முடியும். இந்த விடயத்தில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்துமாறும் பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்