பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல்

Jaffna Srilanka Bus
By Kajinthan Mar 28, 2026 02:11 PM GMT
Report

யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28)பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று(28) காலை யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் குறித்த மலசல கூடத்தொகுதிக்கு நீர் இணைப்பை வழங்கும் நோக்குடன் சென்றிருந்த நிலையில் அவர்கள் இ.போ. சபையினரால் தடுக்கப்பட்டதை அடுத்தே பிரச்சினை உருவானது.

முன்பதாக பல்வேறு தரப்பினரது கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஆட்சிக்காலத்தில் இ.போ.சவினால் இந்த பொது மலசலகூட கட்டட நிர்மாணத்துக்காக யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் திட்ட மொழிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

மலசலகூடம் அமைக்கப்பட்ட இடம்

யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கென குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்ட இ.போ.சவின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பிலேயே இந்த மலசலகூடம் அமைக்கப்பட்டது. அத்துடன் பொது மலசலகூடம் கட்டடுவதற்கான அனுமதியையும் இ.போ.ச விடம் யாழ். மாநகரசபை கோரி பெற்றே இத்திட்டம் நிறைவுறுத்தப்பட்டது.

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல் | Public Toilet Jaffna Municipal Council Ctb

இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதியன்று குறித்த மலசலகூட தொகுதியை குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பத்தை யாழ். மாநகரசபை, பத்திரிகை மூலம் கோரியிருந்தது. இது குறித்து குறித்த தரப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியா - இலங்கை விமான சேவைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

இந்தியா - இலங்கை விமான சேவைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

தன்னிச்சையாக நிர்வகிக்க மாநகரசபை முயன்றால் போராட்டம்

இதற்கு குறித்த நிலப்பரப்பை யாழ். பிரதேச செயலகம் தம்மிடம் பாரப்படுத்தியுள்ளதாக மாநகரசபை தெரிவித்ததாக கூறப்படுகின்றது. எமக்குரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பொது மலசலகூடத்தை தன்னிச்சையாக நிர்வகிக்க மாநகரசபை முயன்றால் நாம் சேவையை முடக்கிப் போராடி எமக்கான நீதியைப் பெறுவோம் என இ.போ.ச. தரப்பினர் தெரிவித்தனர்.

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல் | Public Toilet Jaffna Municipal Council Ctb

காவல்துறையின் உதவியை நாடுவோம்

இதேவேளை இவ்விடயம் குறித்து யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கூறுகையில், நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானது. இது ஒருவருக்கு என வரையறை செய்து கொடுக்கவில்லை. எனவே மக்களுக்கான சேவைக்காக இந்த கட்டட தொகுதியை மாநகரசபை நிர்மாணித்தது. கட்டுமாணம் நடைபெறும் வரை எந்த பிரச்சினையும் வரவில்லை.

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல் | Public Toilet Jaffna Municipal Council Ctb

ஆனால் மக்கள் பாவனைக்காக திறந்துவிடும் போதுதான் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இ.போ.ச தொடர்ந்தும் இடையூறாக இருந்தால் காவல்துறையின் உதவியுடன் சட்ட உதவியை நாடி நாம் இந்த கட்டடத்தை திறந்தே தீருவோம் என்றனர்.

யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் பலி!

யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019