நாளை பொதுப் போக்குவரத்து இடம்பெறுமா? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
Corona
Dilum Amunugama
SriLanka
Transportation
By Chanakyan
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாளைய தினத்தில் எவ்வித பொதுப் போக்குவரத்துகளும் இடம்பெறமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடையானது நாளைய தினம் தளர்த்தப்படும் நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயணத்தடையானது நீக்கப்பட்டவில்லை எனவும், தளர்த்தப்படுகின்றது எனவும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
மேலும் மாதம் 7ஆம் திகதி வரை இந்தப் பயணத்தடை அமுலில் இருக்கும் என இன்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்