கடும் மன வேதனையடைகிறேன் - கவலையில் மைத்திரிபால சிறிசேன
நான் நாட்டின் அரச தலைவராகவும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்றமைக்கு மிகவும் வேதனை அடைகின்றேன்.
இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரச தலைவரின் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
