இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தண்டனை! அரசாங்கத்தின் புதிய சட்டமூலம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் உண்மை ஆணைக்குழுவுக்கான (Truth commission)சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆணைக்குழுவால் கொண்டுவரப்படும் சட்டங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக யுத்தத்தில் இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவென தோன்றுகிறது என சிரேஷ்ட ஊடவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், ''இலங்கையில் அரசியல்,சமூக,பொருளாதாரம்,காலசாரம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதே போராட்டமாகும்.
போராட்டங்களின் உண்மைத்தன்மை
இவ்வாறான போராட்டங்களின் உண்மைத்தன்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கு Truth commission ஒன்று தேவைத்தான்.
இலங்கையில் 1815 கண்டி இராச்சியம் கைவிடப்பட்டு எங்கள் சுதந்திரம் பரிக்கப்பட்ட சம்பவம், மேலும் 1818 பெரும் கிளர்ச்சி, 1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி அத்தோடு முப்பது வருடங்கள் நடந்த பிரிவினைவாத யுத்தம் போன்றன எமது நாட்டில் பாரிய மாற்றங்களை உண்டாக்கியது.
அதே போல் 2022 ஆம் ஆண்டு அரகலய போட்டத்தின் பல உண்மை தகவல்கள் மறைந்திருக்கிறது. அல்லது மறைக்கப்பட்டுள்ளது.
சில தகவல்கள் வெளிவரலாம்,சில தகவல் வெளியிடப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவை வெளிகொண்டுவரப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் அரகலய போராட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதனால் அரகலய உண்மைகள் வெளியில் வருமா என்பது சந்தேகமே” என அவர் கூறியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
